உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆடுகள் திருட வந்தவர்களை தடுத்த விவசாயிக்கு கத்திகுத்து

ஆடுகள் திருட வந்தவர்களை தடுத்த விவசாயிக்கு கத்திகுத்து

நத்தம்: நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி கரடிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி எழுவன் 70. இவர் தனது வீட்டின் அருகே 3 ஆடுகள் வளர்த்து வந்தார். ஜூலை 22 இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்க வெளியே வந்து பார்த்த போது மூங்கில்பட்டியை சேர்ந்த அழகுமுத்து 30, மகேந்திரன் 17, மலைச்சாமி 17, ஆகியோர் ஆடுகளை திருட முயன்றனர். இதை பார்த்த எழுவன் கூச்சலிட்டுள்ளார். ஆத்திரமடைந்த 3 பேரும் எழுவனை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை