உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருப்பு கொடியுடன் உண்ணாவிரதம்

கருப்பு கொடியுடன் உண்ணாவிரதம்

சின்னாளபட்டி: வக்கம்பட்டியில் மே 27ல் காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. ரத ஊர்வலம், வாணவேடிக்கை தொடர்பாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை உருவானது. வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் ரோடு மறியல் செய்தனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண போலீசார் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வலியுறுத்தி ஒரு தரப்பினர் நேற்று காளியம்மன் கோயில் முன்பு கருப்பு கொடி ஏந்தி உண்ணாவிரதம் துவக்கினர். சிவசேனா மாநில தலைவர் பாலாஜி, ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி தலைவர் மோகன், ஹிந்து முன்னணி கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ