காட்டுப் பன்றிகளால் அச்சம்
கள்ளிமந்தையம்: பொருளூர்,பாலப்பன்பட்டி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி, கடலை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் தற்போது இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்தது. இவை தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். பாலப்பன்பட்டி விவசாயி சின்னச்சாமி கூறியதாவது: இப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகளை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.