| ADDED : மார் 06, 2024 06:07 AM
நத்தம் : நத்தம் தொகுதி அ.தி.மு.க., சார்பாக நத்தம் காந்தியார் கலையரங்கத்தில் நடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது லோக்சபா தேர்தலில் நாம் வெற்றி பெற்று வெற்றி விழா கூட்டம் போல் உள்ளது. ஜெயா ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தி.மு.க., ஆட்சியில் நிறுத்தபட்டுள்ளன. விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கின்றனர். தி.மு.க., அரசால் தேர்தல் காலத்தில் அறிவிக்கபட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றவில்லை.இந்த ஆட்சியை மக்கள் வெறுக்க தொடங்கி விட்டனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்பிகின்றனர். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றார்.ஒன்றிய அவைத் தலைவர் பிறவிக்கவுண்டர் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி,முருகன் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சேக்ஒலி வரவேற்றார். மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி,ஒன்றிய குழு துணைதலைவர் முத்தையா, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லையா, பேச்சாளர்கள் மல்லன், பழனிச்சாமி, சாணார்பட்டி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் விஜயன் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.