| ADDED : டிச 19, 2025 07:10 AM
வடமதுரை: ''தமிழ்நாட்டில் கல்வியறிவு மென்மேலும் மேம்பட திட்டங்களை தருபவராக இல்லாமல் கொட்டுபவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக'' வேடசந்துார் தி.மு.க., காந்திராஜன் பேசினார். பாகாநத்தம் மலைப்பட்டியில் சமுதாய கூடம் பூமி பூஜை , தென்னம்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய பட்ஜெட்டில் முதலிடத்தில் கல்வியே உள்ளது. கல்வியறிவு மென்மேலும் அதிகரித்து பண்பட்ட, உயர்ந்த சமுதாயம் மாநிலத்தில் உருவாக திட்டங்களை தருபவராக இல்லாமல் கொட்டுபவராக முதல்வர் உள்ளார் என்றார். தென்னம்பட்டி அரசு பள்ளியில் பழுதான வகுப்பறை கட்டடத்தை சீரமைக்க உதவியதற்காக மாணவிகள் எம்.எல்.ஏ,வுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், தலைமை ஆசிரியர் ராமன், உதவி தலைமை ஆசிரியர்கள் அழகுக்கரசி குரைசா, கருப்புசாமி பங்கேற்றனர்.