UPDATED : செப் 15, 2026 10:44 PM | ADDED : செப் 15, 2026 06:02 PM
வத்தலக்குண்டு:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வத்தலக்குண்டில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. ஹிந்து முன்னணி சார்பில் வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, எம்.வாடிப்பட்டி, பழைய வத்தலக்குண்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. விழா முடிந்ததும் நேற்று மாலை அனைத்து சிலைகளும் வத்தலக்குண்டு காளியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. காஞ்சிபுரம் கோட்ட தலைவர் மணி, பா.ஜ.க., மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முனியாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணாதுரை பங்கேற்ற ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கண்ணாபட்டி வைகை ஆற்றுக்கு கொண்டு சென்று விஜர்சனம் செய்யப்பட்டன. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடந்தது.