| ADDED : பிப் 16, 2024 05:57 AM
ஆக்கிரமிப்பால் அவதிகோபால்பட்டி பஸ் ஸ்டாப் போலீஸ் கண்காணிப்பு மையம் எதிரே இருசக்கர வாகனங்கள் , ஆட்டோக்கள் நிறுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது. வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரா, கோபால்பட்டி.பயணிகளுக்கு இடையூறுசெம்பட்டியில் குமுளி பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் ரோட்டிலே நிற்கின்றனர் .விபத்துக்களும் நடக்கிறது .ஆக்கிரமிப்பு அடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி. ராஜேந்திரன், செம்பட்டி............--------மின்கம்பம் சேதம்பழநி அருகே மரிச்சிலம்பு காளிம்மன் கோயில் அருகே மின்கம்பம் சேதம் அடைந்து சிமென்ட் பூச்சு சேதமடைந்து கம்பி வெளியே தெரிவதால் அருகே செல்ல பயத்துடன் சொல்கின்றனர் .மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஸ்வரன், மரிச்சிலம்பு..................-------நாய்களால் தொல்லைஒட்டன்சத்திரம் அண்ணாநகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளதால் குழந்தைகள் நடமாட அச்சமாக உள்ளது. தெருவில் செல்வோரை விரட்டி சென்று கடிக்க பாய்கிறது .நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டுக்காமல் உள்ளது. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். -கருப்புசாமி ஒட்டன்சத்திரம்...........--------கழிவு நீரால் நோய் தொற்றுவடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள பூத்தாம்பட்டி பஸ் ஸ்டாப் மூலம் சுற்றுப்பகுத கிராம மக்கள் வெளியூர் சென்று வருகின்றனர். பயணிகள் காத்திருக்கும் பகுதி ரோட்டில் கழிவு நீர் செல்வதால் நோய் தொற்றுடன் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. கருப்புச்சாமி, எரியோடு.........--------தரைப்பாலம் சேதம்திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில் தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது .இதனால் விபத்து அபாயம் உள்ளது. மக்கள் அதிகமாக சென்று வரும் பாதை என்பதால் தரை பாலத்தை சரி செய்ய வேண்டும். மணிராஜ், திண்டுக்கல்.................--------குப்பையால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல் - திருச்சி ரோடு ரயில் மேம்பாலத்தில் இருந்து காந்திஜி நகர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .மண்வளம் பாதிக்கிறது. குப்பையை அகற்றாமல் இருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது கர்ணன், காந்திஜிநகர்...............-------