மேலும் செய்திகள்
கோதாவரியால் ஆந்திரா - தெலுங்கானா அக்கப்போர்
20-Jul-2025
வேடசந்துார்: வேடசந்துார் கரூர் நான்குவழிச்சாலையில் ரங்கநாதபுரம் அருகே ராட்சத ஆந்தை ஒன்று ரோடு குறுக்காக பறந்து கடக்க முயற்சித்துள்ளது. அப்போது கரூரிலிருந்து திண்டுக்கல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராட்சத ஆந்தை இறந்து கிடந்தது. 3 அடி நீளம் கொண்ட ஆந்தையின் முகம் மனித முகத்தை போல் வட்ட வடிவில் இருந்தது. நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தினர் இறந்த ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ரெங்கமலை பாரஸ்டர் முரளி கூறுகையில்,'' இது கழுகு இனத்தை சேர்ந்த ஆந்தை இனமாகும். இதை கூகை என்றும் கூறுவர். இதற்கு பகலில் கண்ணு தெரியாது. இரவு 7:00 மணிக்கு மேல் தான் பார்வை தெரியும் '' என்றார்.
20-Jul-2025