விபத்தில்லாமல் வாகனம் ஓட ஆடுகள் வெட்டி அன்னதானம்
கோபால்பட்டி: விபத்தில்லாமல், லாபகரமாக வாகனங்கள் ஓட கணவாய்ப்பட்டி கருப்பணசுவாமி கோயிலில் சரக்கு வாகன உரிமையாளர்கள்,டிரைவர்கள் ஆடுகள் வெட்டி அன்னதானம் வழங்கினர். புதிய வாகனங்கள் வாங்குபவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இக்கோயிலில் சிதறு தேங்காய் உடைத்து பூஜை செய்வதும், ஆடி மாதத்தில் ஆடுகள் வெட்டி பூஜை செய்வதும் வழக்கம். இதேபோல் இந்தாண்டு கோபால்பட்டி சுற்றுப்பகுதிகளில் சிறிய வகை சரக்கு வாகனங்கள் வைத்திருப்பவர்கள், டிரைவர்கள் 150க்கு மேற்பட்டோர் கணவாய் கருப் பணசுவாமி கோயிலுக்கு வந்தனர். வாகனங்களுக்கு மாலைகள், சந்தனம் பூசி சுவாமிக்கு ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அசைவ அன்னதானம் வழங்கினர்.