இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி
திண்டுக்கல்: மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ஓய்வு எஸ்.ஐ., ராஜேந்திரன் 63, மனைவி ஜெயலட்சுமி. 2018 ல் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் வந்துவிட்டு திரும்பியபோது வாடிப்பட்டி அருகே பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இருவரும் காயம் அடைந்தனர். இழப்பீடு கோரி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ராஜேந்திரனுக்கு ரூ.10 லட்சத்து 67 ஆயிரம், ஜெயலட்சுமிக்கு ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனால் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கனகராஜ் 2 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.