மேலும் செய்திகள்
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த ஆர்ப்பாட்டம்
28-Dec-2024
திண்டுக்கல் : புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத்தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை,பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் என 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வட்டகிளை செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். அரசு மருத்துவமனையில் மாவட்ட இணை செயலாளர் பாப்புலெட் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தலைவர் முபாரக் அலி பேசினர்.
28-Dec-2024