உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சித்த மருத்துவமனை அருகே மருத்துவக்கழிவுகள் எரிப்பு சர்ச்சையில் அரசு மருத்துவமனை

சித்த மருத்துவமனை அருகே மருத்துவக்கழிவுகள் எரிப்பு சர்ச்சையில் அரசு மருத்துவமனை

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கழிவுகளை செயல்படும் சித்த மருத்துவமனையின் அருகில் கொட்டி எரிப்பதால் நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கின்றனர். திண்டுக்கல் திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இதன் பின் பகுதியில் கோபால சமுத்திரக்கரை ரோட்டில் சித்த மருத்துவமனை உள்ளது. இங்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் என 5 பிரிவுகள் செயல்படுகிறது. தினமும் 500க்கு மேலானவர்கள் தான். அரசு மருத்துவமனையின் பின்புறம் சித்தா மருத்துவமனைக்கு செல்ல வழி உள்ளது. அந்த கதவை பூட்டி அதன் அருகே மருத்துவக்கழிவுகளை மூடைகளில் கொண்டு வந்து கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதிலிருந்து வெளிவரும் புகையை சித்த மருத்துவமனை ஊழியர்கள், யோகா பயிற்சியில் ஈடுபடும் நோயாளிகள், சிகிச்சை வருவோர் சுவாசிக்க வேண்டியுள்ளது. இங்கிருக்கும் மருந்துகள் அனைத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதால் நச்சு புகை மூலம் கெட்டுப்போகும் நிலையும் உள்ளது. மருத்துவமனை டீன் சுகந்திராஜகுமாரி கூறியதாவது: மருத்துவமனை வளாகத்திற்குள் எந்த கழிவுகளையும் எரிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளேன். கழிவுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்துகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை