உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 5 மாணவர்களுக்கு குறைவாக இயங்கும் அரசு பள்ளிகள்; ஆசிரியர்,சத்துணவு, காலை உணவு என நிதிகள் வீணடிப்பு

5 மாணவர்களுக்கு குறைவாக இயங்கும் அரசு பள்ளிகள்; ஆசிரியர்,சத்துணவு, காலை உணவு என நிதிகள் வீணடிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு துவக்க,நடுநிலை பள்ளிகள் உள்ளன. சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசு என்னதான் இலவச புத்தகங்கள், சீருடை,பேக், காலணி, மதிய உணவு ,காலை சிற்றுண்டி என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினாலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை.இதற்கு காரணம் மாணவர்களின் ஆங்கில வழிக் கல்வி மோகம் என்றாலும் சில அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் மாணவர்களே இல்லாத பள்ளிகளும், 1,2,3,4,5 என்ற மாணவர்கள் எண்ணிக்கைக்குள் உள்ள பள்ளிகளும் கூடுதலாக உள்ளன. மாணவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், சத்துணவு ஊழியர், சமையலர், காலை சிற்றுண்டி சமைப்பவர் என வேலை பார்க்கின்றனர்.சமீபகாலமாக கிராமப்புறங்களில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் ஒரு சில மாணவர்களே உள்ள நிலையில் அந்தப் பள்ளிகளை இழுத்து மூட அந்த ஊர் மக்கள் முன் வருவதில்லை. காரணம் தேர்தல் காலங்களில் அந்த பள்ளிகள் தான் ஓட்டுச்சாவடிகளாக பயன்படுகின்றன என்கின்றனர்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் காலங்களில் ஓட்டுச்சாவடிகளாக பள்ளிகள் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் கிராம மக்களின் கருத்தை மாவட்ட கல்வித்துறையும் தலை வணங்கி செல்கிறது. மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் உள்ள நிலையில் ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தது 80 பள்ளிகள் என்றாலும் மாவட்ட அளவில் ஆயிரம் பள்ளிகள் கணக்கில் வருகின்றன. ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தது 7 முதல்10 பள்ளிகளில் 5 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பள்ளிகளை கணக்கெடுத்து இந்த பள்ளிகளை பக்கத்தில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க அரசு முன் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ