உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு டவுன் பஸ் இயக்கம் குறைப்பு; வசூலில் குஷியான ஆட்டோக்கள்

அரசு டவுன் பஸ் இயக்கம் குறைப்பு; வசூலில் குஷியான ஆட்டோக்கள்

ரெட்டியார்சத்திரம்; கன்னிவாடி, செம்பட்டி வழித்தடங்களில் அரசு பஸ் சேவைகள் குறைப்பால் ஆட்டோக்களில் கூடுதல் வசூல் தாராளமாக உள்ளது.திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடி ,செம்பட்டி, ஆத்துார் ,சின்னாளபட்டி உள்ளிட்ட இடங்களுக்கு அரசு ,தனியார் பஸ்கள் இயங்குகிறது. இவற்றில் ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, சின்னாளபட்டி வழியே ஆத்துார் செல்லும் டவுன் பஸ்கள் டிரிப்-கட் தொடர்கிறது.பொங்கல் பண்டிகை, பழநி பாதயாத்திரை சூழலில் 2 நாட்களாக அரசு டவுன் பஸ் சேவையில் பாதிப்பு அதிகரித்தது. பஸ் வசதியை நம்பி கூலி வேலைக்கு வெளியூர் சென்ற தொழிலாளர்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டோக்களில் கூடுதல் வசூல் தாராளமாகி விட்டது.ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி நந்தகுமார் கூறுகையில், புதிதாக விடப்பட்ட அரசு டவுன் பஸ்கள் வெளியூர் சிறப்பு கட்டண இயக்கத்திற்காக அனுப்பப்பட்டன. அரசு பஸ் சேவை குறைபாடு தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வாகன வசதியற்றோர், அரசு பஸ் சேவையை மட்டுமே நம்பி உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் பலர், அதிக சம்பளத்தை ஆட்டோக்களுக்கு செலவிட வேண்டிய அவலம் நீடிக்கிறது. வழக்கமான பஸ் சேவையை நிறுத்துவதை தவிர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை