உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கு அக்.23 ல் கவர்னர் ரவி வருகை

கொடைக்கு அக்.23 ல் கவர்னர் ரவி வருகை

கொடைக்கானல் : கொடைக்கானல் தெரசா பல்கலையில் அக்.23 ல் நடக்கும் 31 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக பல்கலை துணைவேந்தர் கலா கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொள்கின்றனர். விழாவில் 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலை மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என 6635 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ