பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்,: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிடும் மாநில மாவட்ட திட்ட அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், கணினி வகைப்படுத்துவர்கள் ,ஒப்பந்த பணியாளர்கள் என 32,500 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தாமதமாக ஊதியம் வழங்குவதை கண்டித்தும், இனி வரும் காலங்களில் மாத ஊதியத்தினை அம்மாதத்தின் இறுதி வேலை நாட்களில் வழங்கிடவும் கோரி அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாநில தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலர் சாதிக்பாட்ஷா, மாவட்ட தலைவர் சேவியர், செயலர் ரமேஷ், அலுவலக பணியாளர்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலர் ரமேஷ், மகளிர் அணி ரவிப்பிரியா பங்கேற்றனர்.