மேலும் செய்திகள்
மேம்பாலத்தில் விபத்து லாரியில் சிக்கி தம்பதி பலி
04-Apr-2025
எரியோடு : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கிழக்கு மாரம்பாடியைச் சேர்ந்தவர்கள் விவசாய தம்பதி வேளாங்கண்ணி ஆரோக்கியம், 70; கேத்தரின்மேரி, 64. மகன்கள் இருவரும் திருமணமாகி தனியே சென்ற நிலையில், தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியே வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தம்பதியை குச்சியால் தாக்கி, கத்தியால் குத்தி கேத்தரின்மேரி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர். காயமடைந்த தம்பதியை உறவினர்கள், வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தம்பதியின் பேரன் அருண்குமார், 40, உள்ளிட்ட இருவரை எரியோடு போலீசார் தேடுகின்றனர்.
04-Apr-2025