உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடுக்கம் மண் சரிவு ரோட்டில் நெடுஞ்சாலை பொறியாளர் ஆய்வு பாறைகள் துளையிடும் பணியும் துவக்கம்

அடுக்கம் மண் சரிவு ரோட்டில் நெடுஞ்சாலை பொறியாளர் ஆய்வு பாறைகள் துளையிடும் பணியும் துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அடுக்கம் ரோட்டில் ஏற்பட்ட மண் சரிவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்த நிலையில் பாறைகளில் துளையிடும் பணி துவங்கி உள்ளது.கொடைக்கானலில் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அடுக்கம் ரோட்டில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.இடிபாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் அடுக்கம் சாமக்காட்டுபள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.இதை தொடர்ந்து குருடிக்காடு பகுதியில் பாறைகளை துளையிட்டு அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலையினர் ஈடுபட்டனர் . சாமகாட்டு பள்ளத்தில் ரோடு பிளவு பகுதியில் மணல் மூடைகள் அடுக்கும் பணியை இன்று முதல் தொடங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர். உதவி கோட்ட பொறியாளர் ராஜன், உதவி பொறியாளர்கள் சரவணன், ராமமூர்த்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை