உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தோட்டக்கலைதுறையினர் ஆய்வு

தோட்டக்கலைதுறையினர் ஆய்வு

கொடைக்கானல்: தினமலர் செய்தி எதிரொலி கொடைக்கானல் மேல் மலைப்பகுதியில் கனமழையால் படிமுறை நிலங்களில் வரப்பு சரிந்துள்ளதை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை கொட்டியது. இதையடுத்து இங்குள்ள படிமுறை நிலங்களில் வரப்புகள் சரிந்து பாதித்துள்ளது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து கூக்கால், மன்னவனுார் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பயிர் சேதங்களை பார்வையிட்டனர். உதவி தோட்டக்கலை அலுவலர் சுந்தர், ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தனர். வரப்பு சரிவுகளை சீர் செய்ய வேளாண் பொறியியல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ