உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி பக்தர்களை குறி வைத்து திடீர் ஓட்டல்கள்; கேள்விக்குறியாகும் சுகாதாரம்

பழநி பக்தர்களை குறி வைத்து திடீர் ஓட்டல்கள்; கேள்விக்குறியாகும் சுகாதாரம்

ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை குறி வைத்து முளைத்துள்ள திடீர் ஓட்டல்களில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை குறி வைத்து புதிதாக ரோட்டோரங்களில் தற்காலிக ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன .இந்த ஓட்டல்களில் சுகாதாரம் சிறிதளவும் இல்லை. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை மறித்து துணிக்கடைகள், பனியன் கடைகள் போடப்பட்டுள்ளன.பக்தர்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ள இது போன்ற கடைகளை அகற்ற வேண்டும். பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு வசதியாக ஒளிரும் பட்டைகள், குச்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி