| ADDED : நவ 15, 2025 04:59 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான(எஸ்.ஐ.ஆர்.,) விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்து வமனையில் நடந்தது. இதற்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வீரமணி தலைமைவகித்து துவக்கி வைத்தார். இதில் உதவி கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி ஆர்.எம்.ஓ., செந்தில்குமார், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவிகள் பங்கேற்றனர். பழநியில் நகராட்சி கமிஷனர் டிட்டோ துவங்கி வைத்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தத்தின் அவசியம் ஆகியவை குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பழநி பஸ் ஸ்டாண்ட், மயில் ரவுண்டானா முதல் பாளையம் ரோடு வழியாக தேவர் சிலை வரை மனித சங்கிலி அமைக்கப்பட்டது. துணை தாசில்தார் மைதிலி, நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், வருவாய் அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள்கலந்து கொண்டனர்.