உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறிவிப்போடு நிற்கும் ஊக்கத்தொகை; மிஞ்சியது ஏமாற்றமே அதிருப்தியில் பால் உற்பத்தியாளர்கள்

அறிவிப்போடு நிற்கும் ஊக்கத்தொகை; மிஞ்சியது ஏமாற்றமே அதிருப்தியில் பால் உற்பத்தியாளர்கள்

மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் காரணமாக கூலி ஆட்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை மறந்து கால்நடை வளர்ப்புக்கு மாறி வருகின்றனர். நடப்பு ஆண்டில் போதிய பருவமழை இல்லாத நிலையில் கிணறுகள் ,போர்வெல்களுக்கு போதிய நீர் வரத்தும் இல்லை. இதனால் விவசாயிகள் கால்நடை வளர்ப்பை பெரிதும் நம்பி உள்ளனர்.இந்த நிலையில் டிச.18ல் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத் தொகையாக ஒரு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்தார். அமைச்சர்அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில் அமைச்சரின் அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என பால் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தனியார் கலப்பு தீவனத்தை வாங்கி கால்நடைகளுக்கு கொடுத்து வந்த நிலையில் அந்தத் தீவனத்தால் மாடுகள் மடி வத்தி, சினை பிடிக்காமல் போனதாகவும் அடிமாட்டு விலைக்கு கால்நடைகளை விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதே கோரிக்கையை வலியுறுத்தி பழநி பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தும் அதிகாரிகள் முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை