உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் தொடர் சாரல் மழை வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

கொடையில் தொடர் சாரல் மழை வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிமூட்டம், தொடர் சாரல் மழையால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடியது.இங்கு சில தினங்களாக நகரை பனிமூட்டம் சூழ்ந்து எதிரே வரும் நபர்கள் தெரியாத நிலை நீடித்து வருகிறது. இதில் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மிதமான மழை பெய்தது. நேற்று காலையில் துவங்கிய சாரல் மழை மாலை வரை தொடர்ந்ததால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர். முக்கிய சுற்றுலா தலங்கள் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி