ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டியில் வருமான வரித்துறை சோதனை
ஒட்டன்சத்திரம்,:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகைக்கடை, சத்திரப்பட்டியில் உள்ள சிட்பண்டில் மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் உள்ள குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க், அவர்களது வீடுகளில் நேற்று காலை 10:00 மணி முதல் மதுரையில் இருந்து வந்த வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதே போல் சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான ராயர் சிட்பண்ட், அவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 20க்கு மேற்பட்டோர் நேற்று காலை 10:00 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை இரவு 7:00 மணிக்கு பின்னரும் நீடித்தது.