| ADDED : நவ 21, 2025 05:56 AM
அச்சுறுத்தும் நாய்கள் பழநி கிழக்கு பாட்டாளி தெருவில் சுற்றி திரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இவைகளை கடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர் .இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேசன், பழநி. மட்டைகளால் தொற்று திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் தேங்காய் மட்டைகளை கொட்டுகின்றனர் . மட்டையில் மழைநீர் தேங்கிகொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது . மட்டைகளை கொட்டாமல் தடுக்க வேண்டும்.சுமதி,திண்டுக்கல். குவியும் குப்பை பழநி சிவகிரிப்பட்டி பைபாஸ் ரோடு சித்திரை அப்பார்ட்மென்ட் எதிரே பல நாட்களாக குப்பை அள்ளாமல் குவிந்துள்ளது. இதனால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.இதோடு பிளாஸ்டிக் குப்பையாலும் பாதிப்பு ஏற்படுகிறது . மேரி, பழநி. -நோய் பரவும் அபாயம் கணவாய்ப்பட்டி பங்களா கிராமத்திலிருந்து தனியார் வங்கி செல்லும் ரோடு சேதமடைந்து தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரபிரச்னை ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி, கணவாய்பட்டி. மின்கம்பத்தில் செடிகள் சுந்தரபுரி பகுதி அருகில் இருக்கும் மின்கம்பத்தில் செடி, கொடிகள் உச்சி வரை படர்ந்து வளர்ந்துள்ளன. இவற்றில் ஏறும் அரியவகை உயிரினங்கள் மின்தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை வேண்டும். - சுப்பையன், வடமதுரை. புதர்மண்டிய வளாகம் திண்டுக்கல் அருகே வேடப்பட்டியில் சுகாதார வளாகம் பயன்பாடுன்றி செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.ராஜா ,வேடப்பட்டி. மழை நீரால் சுகாதாரக்கேடு தோட்டனுாத்து அருகே அரசனம்பட்டியில் சாக்கடை வசதி இல்லாததால் மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதால் இப்பகுதியில் சாக்கடை கட்டவேண்டும்.ஜோதி, அரசனம்பட்டி.