உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேங்கும் மழை நீரால் தொற்று; கொசுக்கடி தாங்கல பரிதவிப்பில் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்

தேங்கும் மழை நீரால் தொற்று; கொசுக்கடி தாங்கல பரிதவிப்பில் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்

திண்டுக்கல் : முறையற்ற ரோடுகள், சாக்கடைகள் இல்லை, நாய்கள், மாடுகள், கொசுக்கள் தொல்லை, மழை பெய்தால் தேங்கி நிற்கும் நீரால் நோய்தொற்று என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்பு வாசிகள்திண்டுக்கல் - தாடிகொம்பு ரோட்டில் உள்ள பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொறுப்பாளர்கள் மணிகண்டன், அருணாச்சலம், ராமலிங்கம் கூறியதாவது : வளர்ந்து வரும் பகுதிகளாக பண்ணை குறிஞ்சி நகர் சுற்றுப்பகுதிகள் உள்ளன. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கான ரோடு சேதமடைந்துள்ளது. குடியிருப்பை சுற்றி எந்த இடத்திலும் சாக்கடை இல்லை. சாக்கடை இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி விடுகிறது.மழை பெய்தால் காலி மனைகள் உட்பட அனைத்து இடங்களிலும் நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. நீர் செல்லவும் வழியில்லை. அதுவாக வடிந்தால் உண்டு. நீர் செல்ல வடிகால்கள் இல்லாததது பெரும் பிரச்னையாக உள்ளது. காலி மனைகளில் தேங்கும் நீரால் கொசு உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படுகிறது. மிகவும் முக்கிய பிரச்னையே தெரு விளக்குகள் இல்லாததுதான். இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். விஷப் பூச்சிகள், பாம்புகள் வருவது தெரியவதில்லை.குப்பைத் தொட்டிகள் எங்குமே இல்லை. குப்பையை யாரும் அள்ளுவதில்லை. மாநகராட்சி , குறும்பட்டி ஊராட்சி என இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் குடியிருப்பு நகர் இருந்தாலும் எவருமே கண்டுகொள்வது இல்லை. எத்தனை முறை முறையிட்டும் பயனில்லை. ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம். ஒருவர் கூட இப்பகுதியை கண்டு கொள்வதில்லை. தனித்தீவில் வசிப்பது போல் உள்ளது. வரிகள் உட்பட அனைத்தையும் வாங்கிக் கொள்கின்றனர். வசதிகள் ஏதும் செய்து கொடுப்பதில்லை. தெரு நாய்கள் மாடுகள் ,கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பொதுக்குழாய் என்ற பேச்சிற்கே இடமில்லை. பலரிடம் முறையிட்டும் பயனில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ