புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்
பழநி: பழநி சின்ன கலையம்புத்துார் பழநியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், எம்.பி., சச்சிதானந்தம், கலெக்டர் பூங்கொடி, மகளிர் உரிமைத்தொகை இணை இயக்குனர் கண்மணி, சப் கலெக்டர் கிஷன்குமார், மாவட்ட சமூக நலவுளர் புஷ்பகலா, பழநியாண்டவர் கலைக்கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி பங்கேற்றனர். அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது, ஒட்டன்சத்திரத்தில் புதிய கல்லுாரி கட்டப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் கல்லுாரி மாணவியர் தொடர்ந்து படிக்க மாதம் ரூ.ஆயிரம் வழங்குகிறார் என்றார்.