அரசு மருத்துவமனையில் ஆய்வு
நத்தம்: - நத்தம் அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருகைப் பதிவேடுகள் ஆய்வு செய்த அவர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், உணவுகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மருத்துவ அலுவலர் இளங்கண், டாக்டர் சதீஷ்குமார் உடனிருந்தனர்.