உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆடி 18 தொடர்பான பேட்டி

ஆடி 18 தொடர்பான பேட்டி

பண்டிகையாக கொண்டாடுகிறோம் டாக்டர் சிபி சுதன் --மகா ஸ்மிருதி, திண்டுக்கல்: ஆடி 18 ஐ நதிகளுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடுகிறோம். இந்தநாளில் திருமணமான பெண்கள் தங்களின் தாலிக்கொடியை பிரித்து புதிதாக மஞ்சள் கொடி கட்டி அணிந்து தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். தாலிக்கொடி என்பது ஒரு பெண்ணின் மங்கல வாழ்க்கையின் சின்னம். இதனை புதுப்பிப்பது, தாழ்வு நீங்கி, வாழ்வு நலம் பெற வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. இது நம் வாழ்க்கையில் புதிய சக்தியை, வளத்தை, ஆனந்தத்தை தரும் ஒரு நம்பிக்கையான சடங்காகும். அத்துடன் தாலிக்கொடியை பிரித்து தெய்வ வழிபாட்டுடன் மீண்டும் அணிவது திருமண பந்தம் உறுதியாகவும், கணவன் மனைவி இடையேயான பாசம் நிலைத்திருக்க செய்யும் ஒரு ஆன்மிக செயல். ஆடிப்பெருக்கு நமக்கு நதி வழி வளமும், வாழ்க்கை வழி அமைதியும் தரும் ஒரு புனித நாளாகும். எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நாளில் நாங்களும் பூஜைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை உள்ளிட்டவற்றை நதிகளுக்கு படைத்து பண்டிகையாக கொண்டாடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை