உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி தலைவருக்கு மிரட்டல்; வி.சி.க., நிர்வாகி மீது வழக்கு

ஊராட்சி தலைவருக்கு மிரட்டல்; வி.சி.க., நிர்வாகி மீது வழக்கு

குஜிலியம்பாறை : ஆர்.வெள்ளோடு ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி 67,யிடம் வி.சி.க., மாநாட்டிற்கு நன்கொடை கேட்ட வகையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளை காட்டி மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகம் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.வெள்ளோடு ஊராட்சி தலைவர் பழனிச்சாமி 67. இவரிடம் இடையபட்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சி மாநாட்டிற்கு நன்கொடையாக பணம் கேட்டுள்ளார். அதற்கு ஊராட்சி தலைவர் காலையில் அலுவலகம் வந்து தருகிறேன் எனக் கூறி உள்ளார். பணம் கேட்டால் தர மாட்டாயா என கூறியதால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது சண்முகம் தனது டூவீலரிலிருந்த அரிவாளை எடுத்து வந்து '' நான் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டேன்'' என கூறியப்படி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த இருவர் சத்தம் கேட்டு வர சண்முகம் சென்று விட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகம் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ