உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் புத்தக திருவிழா புகைப்பட போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல் புத்தக திருவிழா புகைப்பட போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடக்க உள்ள புத்தக திருவிழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கான புகைப்பட போட்டி நடத்தப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இலக்கியக்களம் இணைந்து நடத்தும் 12 வது புத்தகத் திருவிழா ஆக. 28 முதல் செப். 7 வரை அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளிமைதானத்தில் நடக்கிறது.இதை முன்னிட்டு நடத்தப்படும் பல்வேறு போட்டிகள் இடையே இந்தாண்டு பொது மக்களுக்கான புகைப்பட போட்டியும் நடக்க உள்ளது. திண்டுக்கல்லின் அடையாளங்கள் எனும் தலைப்பின் கீழ் புகைப்படங்கள் இருத்தல் வேண்டும். கேமரா, அலைபேசி என எதை கொண்டும் எடுத்த புகைப்படமாக இருக்கலாம். புகைப்படத்தில் வேறு தொழில்நுட்ப திருத்தங்கள் செய்யக் கூடாது. அனுப்புவோரின் விவரம், புகைப்படத்தைப் பற்றியும் சிறுகுறிப்போடு மென்நகலை (soft copy) gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் புகைப்படத்தை 15 x 12 என்ற அளவில் பிரின்ட் எடுத்து திண்டுக்கல் இலக்கியக் களம், ந.வெங்கடாசலம் இ.ஆ.ப.அரங்கம், பிச்சாண்டி பில்டிங்ஸ், தலைமை அஞ்சல் நிலையம் அருகில், திண்டுக்கல் 624 001க்கு ஆக. 22 குள் அனுப்புதல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு புத்தக திருவிழா மேடையில் பரிசு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி