மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை ஒருவருக்கு ஆயுள்
31-Jan-2025
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை கும்பூர் அஞ்சுரான்மந்தையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமராஜ் 53.இவர் 2023ல் அப்பகுதியில் வசித்து வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த 15 வயது இரட்டை சகோதரிகளுக்கு தமிழ் கற்று கொடுப்பதாக கூறி அவர்கள் வீட்டிற்கு சென்றார். அங்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.கொடைக்கானல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ராமராஜை கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ராமராஜூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
31-Jan-2025