உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல், : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.,வினர் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அன்னதானம் வழங்கினர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க., அமைப்பு செயலர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜமோகன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், மாவட்ட முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்ஷா, மாவட்ட வழக்கறிஞர் இணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், மாவட்ட மருத்துவர் அணி இணை செயலாளர் லோகநாதன் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம் : பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த விழாவில் நகரச் செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் என்.பி.நடராஜ், பி.பாலசுப்பிரமணி,அப்பன் கருப்புசாமி, சண்முகராஜ், துணைச் செயலாளர்கள் செல்வராஜ்,சண்முகவேல் மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், பேரூர் செயலாளர் குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் உதயம்ராமசாமி, ஜெ., பேரவை துணை செயலாளர் கே.பி.வி. மனோகரன், வழக்கறிஞர் துணைச் செயலாளர் கே.மணிகண்டன், நகர ஜெ., பேரவை செயலாளர் குப்புசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.காமாட்சி ராஜா கலந்து கொண்டனர்.அ.ம.மு.க., சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர், மண்டல பொறுப்பாளர் கே.பி.நல்லசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கே.சுப்பிரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் பி. முருகேசன், நகர அவைத் தலைவர் செல்வம், துணை செயலாளர் ஆர்.வி.ஜி.கஜேந்திரன், நகரப் பொருளாளர் ஏ.எஸ்.ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் குமாரசாமி, மாநில மகளிர் அணி துணைத் தலைவர் எஸ்.வெள்ளைத்தாய், நகர விவசாய அணி செயலாளர் டி.சி.செல்லத்துரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.ஸ்ரீராம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் எம்.சதீஷ்குமார், மாவட்ட சுற்றுப்புறச் சூழல் பிரிவு செயலாளர் எம்.விஜயகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கணேசன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிமுத்து, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சேனாதிபதி, நகர இணை செயலாளர் உமா கலந்து கொண்டனர்.வேடசந்துார்: - வேடசந்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில்நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் பழனியம்மாள், ஜான் போஸ் தலைமை வகித்தனர். நகர செயலாளர் பாபு சேட் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பரமசிவம் இனிப்பு வழங்கினர்.அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஜெ., போட்டோவிற்கு மலர்துாவி இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் சந்தானகிருஷ்ணன், ராஜாங்கம், கந்தவேல், பெருமாள், செல்வி பங்கேற்றனர்.குஜிலியம்பாறை ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ராமகிரி நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் , அன்னதானம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பெருமாள், மணிமாறன், மீனாட்சி சிவகுமார், முனியாண்டி, குமரேசன், சாமிக்கண்ணு, கேசவன், வெங்கடேஷ், வெற்றி, பாண்டி பங்கேற்றனர்.கொடைக்கானலில் நகரச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஜாபர்சாதிக் முன்னிலை வகித்தார். முன்னாள் நகராட்சி தலைவர் கோவிந்தன், அவை தலைவர் ஜான்தாமஸ், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பிச்சை, மாவட்ட பிரதிநிதி பாரூக், தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.ரெட்டியார்சத்திரம் : தருமத்துப்பட்டியில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். பல இடங்களில் ஜெயலலிதா படத்தை அலங்கரித்து இனிப்பு, நல உதவிகள் வழங்கப்பட்டன. தருமத்துப்பட்டி ஊராட்சித் தலைவர் மருதமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன் பங்கேற்றனர்.சின்னாளபட்டி:ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் என்.பஞ்சம்பட்டியில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் விஜய பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கிரஷர் எம்.பாலு, ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் பாலாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மகளிரணி இணைச் செயலாளர் ஆனிசோபிமிடில்டா, வக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பேட்ரிக் பிரேம்குமார், என்.பஞ்சம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.சித்தையன்கோட்டையில் மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் முகமது அலி, ஒன்றிய மாணவரணி செயலாளர் முகமது ஹாஜியார், நிர்வாகிகள் அக்பர் அலி, பேரூராட்சி முன்னாள் துணை த்தலைவர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்க நிர்வாகி முத்து, சசிகுமார், ஜெ., பேரவை நிர்வாகி பாக்கியம் பங்கேற்றனர்.வடமதுரை ஒன்றியத்தில் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தண்டாயுதம், லட்சுமணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை