உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோபால்பட்டி: -கோபால்பட்டி மொட்டையகவுண்டன்பட்டி சக்தி விநாயகர், காளியம்மன், முத்து மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி முன்னதாக திருச்செந்துார், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, கரந்தமலை, அழகர் கோயில் மலை, காவிரி, வைகை உள்ளிட்ட புனித ஸ்தலங்களிலிருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு ஜன.20 முளைப்பாரி,தீர்த்தங்கள் மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,யாக பூஜைகள் நடக்கும். நேற்று காலை விநாயகர் பூஜை, மஹா சங்கமம், வேள்வி பூஜை, வேத பாராயணம், நாடி சந்தானம், பூர்ணா ஆஹிதி. மூலிகை யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாடு, சிவாச்சாரியார்கள் வேத மந்திர முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை