உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி,கல்லுாரிகள் ,பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டப்பட்டது.* திண்டுக்கல்லில் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஜாகீர் உசைன் தலைமை வகித்தார். முன்னாள் தாளாளர் அப்துல்முத்தலீப், அரபி ஆசிரியர் அஜூரத் மு, முகம்மது அமீர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை வர்ஷினி வரவேற்றார். பேகம்சாஹிபாநகரத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியை பாத்திமாமேரி தலைமை வகித்தார். அசனாத்புரத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நிகராபானு தலைமை வகித்தார், பொறுப்பு தலைமை ஆசிரியை அம்பிகாதேவி முன்னிலை வகித்தார்.* நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆனந்த் கார்த்திக் தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.*திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருணகிரி முன்னிலை வகித்தார்., பொதுச்செயலர் காளிதாஸ் வரவேற்றார். தமிழக ஐக்கிய ஜனதா மாநில செயலர் சுந்தர்ஈசன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார். வைரவேல் ஏற்பாடுகளை செய்தார். * இராமராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் 10ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு முன்னால் ஊராட்சி தலைவர்கள் தர்மராஜன், கவிதா தர்மராஜன் பரிசு வழங்கினார். [


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை