உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருப்பு மந்தையம்மன் கோயில் திருவிழா

கருப்பு மந்தையம்மன் கோயில் திருவிழா

நத்தம்: நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு சுவாமி மந்தையம்மன் கோயில்களில் திருவிழா நடந்தது. இதையொட்டி அழகர்கோவில் மலையிலிருந்து நுாபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்ய பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து சுவாமி நல்லாகுளம் சென்று அலங்காரம் செய்து கோயிலுக்கு வருதல், பின்னர் பொங்கல் வைத்து அம்மன்குளம் சென்று தீர்த்தம் எடுத்து வருவதை தொடர்ந்து அன்றிரவு மகளிர் அமைப்பு சார்பாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கிடாய் வெட்டுதல், தீச்சட்டி எடுத்து வருதல், பக்தர்கள் பூக்குழி இறங்குதல், கரகம் அம்மன்குளம் செல்வது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை காந்திநகர் ஊர்பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை