உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

வடமதுரை: அய்யலுாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழா நடந்தது. கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் நடந்த இதற்கு சுக்காம்பட்டி ஜமீன்தார் நந்தகுமார் தலைமை வகித்தார். மணியகாரன்பட்டி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுப்பாநாயக்கர், அ.தி.மு.க., நகர இலக்கிய அணி செயலாளர் ஆண்டிவேல்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்., பொதுசெயலாளர் ரெங்கமலை வரவேற்றார். ஓய்வு நீதிபதி தங்கராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் என்.எஸ்.ஆர். ஜெயசந்திரன், செயல் தலைவர் ராஜ்குமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பழனிச்சாமி, பாலப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் பிச்சை, கூவாக்காபட்டி ஜமீன்தார் சுகுமார்பாண்டியர், ஒன்றிய தலைவர் தனபால், பொருளாளர் வடிவேல் பங்கேற்றனர்.*பழநி பெரியகலையபுத்துார் வீரபாண்டிய கட்டபொம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் காளீஸ்வரன், கணபதி, ராமச்சந்திரன், மனோஜ், ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை