மேலும் செய்திகள்
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்
29-Dec-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கொடைக்கானல் டிவிஷன் போட்டியில் பவான்ஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது. பவான்ஸ் கோப்பைக்கான போட்டிகள் பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த கொடைக்கானல் லயன்ஸ் சிசி 20 ஓவர்களில் 167/7. சூர்யபிரதாப் 41. சேசிங் செய்த செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி அணி 20 ஓவர்களில் 67/7 எடுத்து தோல்வியை தழுவியது. மைக்கேல் டேவிட் 3 விக்கெட். கொடைக்கானல் லேக் நண்பர்கள் சிசி அணிக்கு எதிரான போட்டியில் பெஸ்ட் லெவன்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 127/8. பிரபுகுமார் 3 விக்கெட். சேசிங் செய்த லேக் நண்பர்கள் அணி 20 ஓவர்களில் 72/9 எடுத்து தோல்வியை தழுவியது. மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொடைக்கானல் ஜூனியர்ஸ் சிசி அணி 18.3 ஓவர்களில் 157 ல் ஆல்அவுட் ஆனது. ரமேஷ் 66 ரன், மணிகண்டன் 3 விக்கெட். சேசிங் செய்த ரைனோஸ் சிசி அணி 19.5 ஓவர்களில் 158/3 எடுத்து வெற்றி பெற்றது.மணிமாறன் 51. கொடைக்கானல் யூத் லெவன் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 137/7. பிரவீன் 52. சேசிங் செய்த கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 123 க்கு ஆல்அவுட் ஆகியது. ரெம்ஜித் 40 ரன், கார்த்திக்பாபு 3 விக்கெட்.கொடைக்கானல் பவான்ஸ் வித்யாஸ்ரம் அணி 20 ஓவர்களில் 160/6. ராகேஷ்குமார் 42. சேசிங் செய்த ஸ்பார்க்கர்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 125/9 எடுத்து தோல்வியை தழுவியது.
29-Dec-2024