மேலும் செய்திகள்
வழக்கறிஞர் பலி
09-Oct-2024
சாணார்பட்டி: நத்தம் பரளிபுதுாரை சேர்ந்த வழக்கறிஞர் இளங்கோவன் 55. இவர் நேற்று மாலை 4:30 மணிக்கு நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி டூவீலரில் சென்றார். விலக்குரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோதி விபத்தில் சிக்கினார். அரைமணி நேரம் கழித்து நத்தத்திலிருந்து வந்த 108 ஆம்புலன்சில் இளங்கோவன், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன், இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
09-Oct-2024