உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி அருகே வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழநி அருகே வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட வேலியில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். பழநி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. உணவு , தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிவார பகுதி விளைநிலங்களுக்குள் வருகிறது. ஆண்டிபட்டி வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாயி பழனிசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலியில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கியது. கொழுமம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர்கள் வேலியில் சிக்கிய ஒன்றரை வயது பெண் சிறுத்தை குட்டியை மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை