உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொலை வழக்கில் தொழிலாளக்கு ஆயுள்

கொலை வழக்கில் தொழிலாளக்கு ஆயுள்

பழநி; ஒட்டன்சத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய தொழிலாளிக்கு ஆயுள் தன்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது. ஒட்டன்சத்திரம் அருகே கருமாத்த நாயக்கனுாரை சேர்ந்தவர் சக்திவேல் 50. தனியார் தோட்டத்தில் பணிபுரிந்தார். தோட்டத்து உரிமையாளர் சக்திவேலை வேலையை விட்டு நீக்கிவிட்டு அதே பகுதியை சேர்ந்த வையப்பனை 55, நியமித்தார். இதனால் சக்திவேலுக்கு வையப்பன் இடையே விரோதம் ஏற்பட்டது. 2022 டிச.23 ல் வையப்பனிடம் தகராறு செய்த சக்திவேல் சுத்தியலால் அடித்து கொன்றார். இதன் வழக்கு பழநியில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி மலர்விழி, சக்திவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை