உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லிங்கவாடி- மலையூர் சாலை பூமி பூஜை- அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

லிங்கவாடி- மலையூர் சாலை பூமி பூஜை- அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

நத்தம்: -நத்தம் அருகே முளையூர் ஊராட்சி எல்லைப்பாறையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள லிங்கவாடி -மலையூர் கிராமத்திற்கு தார்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதை உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.இதைதொடர்ந்து நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 286 பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பணி ஆணைகளை வழங்கினார். பரளிபுதூர் ஊராட்சி செயலக புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், மாவட்ட பொருளாளர் க.விஜயன், திட்ட இயக்குநர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன்,தாசில்தார் ஆறுமுகம், பி.டி.ஓ.,க்கள் முருகேஸ்வரி, மகுடபதி, மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.சாணார்பட்டி : சாணார்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 11.50 கோடி மதிப்பில் 276 பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கான பணி ஆணைகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். தொடர்ந்து 51 குப்பை சேகரிக்கும் வண்டிகளையும் வழங்கினர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், பி.டி.ஓ., இளையராஜா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ