மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம்
01-Oct-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் ராக்போர்ட் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் டைமண்ட் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் மகிழ் லயன்ஸ் சங்கம் சார்பில் கொடைரோடு டோல்கேட் அருகே உள்ள வளனார் ஆதரவற்றோர் காப்பகத்தில் தீபாவளிப் பகிர்வு விழா நடந்தது. லயன்ஸ் மாவட்ட தலைவர் ஆடிட்டர் ரவீந்திரன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். சங்கத் தலைவர்கள் சைலேந்திரராய், இளையராஜா, விஜயகுமார் முன்னிலை வகித்தனார். போலீஸ் ஏ.டி.எஸ்.பி., தெய்வம், செயின்ட் மைக்கேல்ஸ் கல்விநிறுவனங்களின் சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று 174 ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் வழங்கினர். முன்னாள் மண்டலத் தலைவர் குமார், குழந்தைவேல், செந்தில்குமார், பூபேஷ்குரு, தாசில்தார் சந்தன மேரி கீதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை லயன்ஸ் மாவட்டத் தலைவர் சாமி, சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், கண்ணன், சந்தோஷ், செபஸ்தியார் செய்திருந்தனர்.
01-Oct-2025