உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மானிய விலையில் கால்நடை உலர் தீவனங்கள்.. தேவை அரசின் கருணை! விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு வழி காணுங்க

மானிய விலையில் கால்நடை உலர் தீவனங்கள்.. தேவை அரசின் கருணை! விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு வழி காணுங்க

மாவட்டத்தில் விவசாயமே பிரதானம் என்ற நிலையில் 90 சதவீதம் விவசாயம் சார்ந்த தொழிலுடன் கால்நடை வளர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. விவசாயிகளின் தற்சார்பு வாழ்க்கை முறை மெல்ல மெல்ல மாறிவரும் நிலையில் கால்நடை வளர்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. வடகிழக்கு பருவமழைக்குப்பின் சில மாதங்கள் நீடிக்கும் பனிப் பொழிவால் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் வளர்வதில் சிக்கல் உள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளின் வளர்ப்பு பாதியாக சரிந்துள்ளது. இதனால் தொழு உரமின்றி மண் வளம் பாதித்து வருகிறது. இயற்கை விவசாயமும் கேள்விக்குறியாகி விட்டது. கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த கால்நடை துறையின் மூலமாக கால்நடை வளர்ப்பிற்கு தேவையான வைக்கோல், சோளத்தட்டை, கடலை கொடி, தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினால் கால்நடை வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படும். இதனால் விவசாய பரப்பும் அதிகரித்து ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் கிடைக்க வழிவகை ஏற்படும்.இதற்கு அரசு கால்நடைகளுக்கான தேவையான உலர் தீவனங்களை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

gopal shanthi
செப் 06, 2024 10:12

மானியம் வழங்கினால் பால் உற்பத்தி அதிகரிக்கும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவார்கள் நன்றி


Devraja D
செப் 05, 2024 23:17

மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது எங்கு கிடைக்கும் தகவல் தெரிவிக்கவும் மிக்க நன்றி


Ilaiyarasan
செப் 05, 2024 12:59

விவசாயிகளிடம் கொள்ளை அடிப்பதை விட்டு விட்டு பால் விலையை உயர்த்தி தர வேண்டும். அரசு கால்நடை மருத்துவர்களை கொண்டு அந்த அந்த பகுதியில் கால்நடை வளர்ப்பு பயிற்சி மற்றும் கால்நடை பண்ணை விரிவாக்கம் கால்நடைகள் வளர்ப்புக்கு தேவையான அரசின் சலுகைகள் இவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . அதற்கான முயற்சியை அரசு நடைமுறை படுத்த வேண்டும்


Gopinath Gopinath
செப் 05, 2024 12:47

எங்க சார் தருவீங்க எங்க போய் வாங்கணும் எப்படி கிடைக்கும்


govindthamarai thamarai
செப் 05, 2024 12:12

பால் விலையை ஏற்றி கொடுங்கள் எங்களுக்கு மானியம் தேவையில்லை உங்கள் கருணையும் எங்களுக்கு தேவையில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை