உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சொத்து கேட்டு தாய்,தந்தையை தாக்கியவர் கைது

சொத்து கேட்டு தாய்,தந்தையை தாக்கியவர் கைது

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கே.அய்யாபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 61. விவசாயி.இவருக்கு பிச்சாயி என்ற மனைவி அழகுமல்லாரப்பன் 31,என்ற மகனும்,2 மகள்களும் உள்ளனர்.இவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பாலமுருகனுக்கு அய்யாபட்டியில் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதை தனது பெயரில் எழுதி தர கூறி அடிக்கடி பிரச்னை செய்து வந்தர். நேற்றும் தந்தையை அவதுாறாக பேசி இரும்பு குழாயால் தாக்கினார் தடுத்த தாய் பிச்சாயியையும் தாக்கினார். இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் அழகு மல்லாரப்பனை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ