மேலும் செய்திகள்
வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு 'பைன்'
03-Oct-2025
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வேட்டையாட சென்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். வடமதுரை ஆலம்பட்டி ரோட்டில் வேலாயுதம்பாளையம் வள்ளிக் கரடு வனப்பகுதியில் அய்யலுார் வனச்சரகர்கள் மதிவாணன், முருகேசன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்பகுதியில் துப்பாக்கியுடன் வன உயிரினங்களை வேட்டையாட வந்திருந்த செங்குறிச்சி எல்லைக்காட்டுப்பட்டி கருப்பையாவை 43, கைது செய்தனர். துப்பாக்கி, வெடி மருந்துகள், டார்ச் லைட்கள், டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன.
03-Oct-2025