உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் சிறை சிறுமி தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் சிறை சிறுமி தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்,: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார் 39. நான்காண்டுகளுக்கு முன் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் செல்வியும் 49, துணையாக இருந்துள்ளார். வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து சிவக்குமார், செல்வி ஆகியோரை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.12 லட்சம் அபராதமும், உடந்தையாக இருந்த செல்விக்கு 7 ஆண்டுகள் சிறையும், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை