உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தம்பதியை கட்டிப்போட்டு 18 பவுன் நகை கொள்ளை; முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

 தம்பதியை கட்டிப்போட்டு 18 பவுன் நகை கொள்ளை; முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

கள்ளிமந்தையம்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த கணவன் மனைவியை கட்டிப்போட்டு 18 பவுன் நகை, ரூ.38 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடுகின்றனர். கள்ளிமந்தையம் அருகே தும்பச்சிபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி 50. மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகன், மகள் வெளியூரில் உள்ளனர். தோட்டத்து வீட்டில் கணவர் ,மனைவி தனியாக வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டின் வெளியில் இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி கட்டிலில் கட்டி போட்டனர். பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ. 38 ஆயிரம், அலைபேசிகளை பறித்து சென்றனர். டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவு கொண்டு கொள்ளையர்கள் குறித்து விசாரிக்கின்றனர். எஸ்.பி., பிரதீப் நேரில் விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி