| ADDED : டிச 26, 2025 05:47 AM
பாலசமுத்திரம்: ''எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் வாக்காளர்களை இணைக்க களப்பணியில் தி.மு.க., நிர்வாகிகள் இருந்துள்ளனர்'' என அமைச்சர் சக்கராபாணி கூறினார். பழநியில் அவர் கூறியதாவது : காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் ஒரு நபருக்கு 55 லிட்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வீடு தோறும் இணைப்புகள் வழங்கப்படும். பழநி - தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க இடம் கையகப்படுத்த நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ. ஆர்., களப்பணியில் தி.மு.க., நிர்வாகிகள் இணைந்து பணியாற்றி உள்ளனர் . எதிர்ப்பு இருந்த நிலையிலும் எஸ். ஐ. ஆர்., வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணியில் தி.மு.க.,கட்சிக்காரர்கள் மட்டும் பணியாற்றி உள்ளனர். வேறு கட்சிகாரர்கள் இதில் அதிகம் ஈடுபடவில்லை. தி.மு.க.,வின் நுாறாவது ஆண்டிலும் ஆட்சியில் இருக்கும் என்றார்.