பூமிதான நிலத்தில் அதிக பட்டா கொடுத்தது ஒட்டன்சத்திரம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
ஒட்டன்சத்திரம் : பூமிதான நிலத்தில் தமிழ்நாட்டிலே அதிக பட்டா கொடுத்த ஒரே தொகுதி ஒட்டன்சத்திரம்'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திம் சட்டசபை தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஒட்டன்சத்திரம் தொகுதியில் இதுவரை 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 10 லட்சத்திற்கு அதிகமான மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 5.5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ள நிலைகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மரக்கன்றுகள் நட ஆயத்தமாக வேண்டும். சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு குறுகிய காலமே உள்ளதால் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். பூமிதான நிலத்தில் தமிழ்நாட்டிலே அதிக பட்டாக்களை கொடுத்த ஒரே தொகுதி ஒட்டன்சத்திரம் தான் என்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சேக் முகைதீன், திட்ட இயக்குனர் திலகவதி, பழநி சப் கலெக்டர் கிஷன் குமார், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், தமிழக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் சதீஸ்குமார், தாசில்தார் பழனிச்சாமி, துணைத் தலைவர் பொன்ராஜ், நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணை த்தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்திய புவனா, இணைப்பதிவாளர் காந்தி நாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, வாடிப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜோதீஸ்வரன் கலந்து கொண்டனர்.